ETV Bharat / state

நெல்லை தொகுதியில் 13 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள்.. கூடுதல் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் தீவிரம்! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Polling stations at Tirunelveli: நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம், அழியா மை உள்ளிட்ட வாக்குப்பதிவிற்குத் தேவையான 113 பொருட்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது
வாக்குபதிவிற்கு தேவையான 113 பொருட்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 5:32 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நாளை (ஏப்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வகையில் 1,810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவிற்காக 3,620 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,810 கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கூடுதலாக 700 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே வாக்களிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், கடந்த வாரம் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், வாக்குப்பதிவிற்குத் தேவையான இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல மண்டலத்திற்கு ஒரு வாகனம் வீதம், 183 வாகனங்கள் நெல்லை ஆயுதப்படை மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையர் மூர்த்தி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணிக்குச் செல்லும் காவலர்களுக்கு வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருள் வழங்கப்பட்டு, வாகனங்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம், அழியா மை, பேலட்பேப்பர் உள்பட 113 பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.

இந்த வாகனங்கள் மாலை 4 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, அந்தந்த சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பு முடிந்து, அவர்களுக்கு போட்டா ஒட்டிய பணியாணை வழங்கப்பட்டு, அவர்களும் பணிக்கு அனுப்பப்பட்டனர்.

தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் துணை ராணுவப்படை, கமாண்டோ படை மற்றும் காவல்துறையினர் என 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 3 அடுக்கு பாதுகாப்பும், சிசிடிவி கேமரா மூலமும் வாக்குப்பதிவை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 344 பதற்றமான வாக்குச்சாவடிகள், 13 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: சத்தியமங்கலம், தாளாவாடி மலைக்கிராம வாக்குச்சாவடிகளுக்கு வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.