ETV Bharat / state

பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா போடும் மாஸ்டர் பிளான்! - O Panneerselvam

VK Sasikala: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளை பிப்.24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளான்று ஒருங்கிணைக்க வி.கே.சசிகலா முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 4:59 PM IST

சென்னை: பிப்.24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பிரிந்துள்ள அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு முன்பு ஜன.26-ல் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார் சசிகலா. பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்.3ஆம் தேதி அதிமுகவினர் சார்பில் தமிழ்நாடெங்கும் உள்ள அண்ணாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்தவகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான வி.கே.சசிகலா ஆகியோரது சந்திப்பு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பிப்.3-ல் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். அந்தவகையில், அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செய்து விட்டு கிளம்பிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா வருவதை கண்டவுடன் காரிலிருந்து இறங்கி சென்று சசிகலாவை சந்தித்தார். அப்போது பேசிய சசிகலாவும், ஓபிஎஸும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு ஓபிஎஸின் அருகே சென்ற வைத்திலிங்கத்திடமும் சசிகலா நலம் விசாரித்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாட்டில் திமுகவை எதிர்ப்பதோடு ஆட்சியைப் பிடிப்பதற்கு பிரிந்துள்ள அதிமுகவை இணைத்தால் மட்டுமே சாத்தியம் என ஓபிஎஸ் பல இடங்களில் செய்தியாளர்களிடம் கூறிவருகிறார்.

முன்னதாக, ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்தியலிங்கம் தலைமையில் தஞ்சாவூரில் நடந்த அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி இல்லாத அதிமுக, டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து இருக்கிற அனைவரும் இணைந்து தேர்தல் களத்தில் நின்றால், வெல்வதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என தெரிவித்திருந்தார்.

அதேபோல, பிப்.24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் சசிகலா மீண்டும் அதிமுக தலைவர்களை ஒன்று சேர்க்க முயற்சிப்பார் என தெரியவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.