ETV Bharat / state

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகள்: 4 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Sivakasi FireCracker Explosion

Sivakasi FireCracker Explosion : சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு விபத்துக்கள் நடைபெற்று பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்து வரும் நிலையில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய ஒவ்வொரு குழுக்களிலும் நான்கு பேர் வீதம் 4 குழுக்கள் அமைத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டடுள்ளார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் புகைப்படம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் புகைப்படம் (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 1:07 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை கடந்த 6ம் தேதி வெடித்து கோர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொலிலாளர்கள் உயிரிழந்தனர். சிவகாசி பட்டாசு ஆலைகள் தொடர் விபத்துக்குள்ளாகி வந்த நிலையில் வீதிகளை மீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் பாயும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய 4 தனி குழுக்களுக்கு உத்தரவிட்டு ஒவ்வொரு குழுக்களிலும் நான்கு பேர் வீதம் அமைத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டடுள்ளார். இன்று (மே 14) முதல் 20ம் தேதி வரையிலும், 28ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரையிலும் ஆய்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு ஆய்வுக் குழுவானது நாளொன்றிற்கு குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாக வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள், பராமரிப்பு இல்லாத கைவிடப்பட்ட கட்டடங்கள் ஆகிய இடங்களில் பட்டாசு உற்பத்தி ஏதும் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வுக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வட்டங்களில், வாரம் ஒரு முறை இரவு நேரங்களில் விதிமீறல்கள் ஏதும் நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ம் தேதியிட்ட தீர்ப்பில், சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையுமில்லை எனவும், ஆனால் பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

மேற்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்படி ஆய்வுக் குழுக்கள் கண்காணிக்க வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்புடைய காவல் நிலையத்தினர் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக வெடி செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிய முன் அனுமதியின்றி விடுப்பு ஏதும் வழங்கப்பட மாட்டாது. ஆய்வுக்குழுவானது தங்களது ஆய்வு அறிக்கையினை உரிய ஆய்வு படிவத்தில் நாள்தோறும் மாலை 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: +1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.. - TN 11th Public Exam Result

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.