ETV Bharat / state

சென்னையில் சொமேட்டோ ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... ஐந்து பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு! - Chennai CCTV viral

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 2:19 PM IST

Attacks on Zomato Delivery Man in Chennai: சென்னை அயப்பாக்கத்தில் சொமே்ட்டோ ஊழியரை துரத்தி துரத்தி கத்தியால் சரமாரியாக குத்தி கிழித்த போதை ஆசாமிகளை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவரது தம்பியுடன் இருந்த தகராறில் இவரை இக்கும்பல் கத்தியால் தாக்கி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related CCTV of Attacks on Zomato Delivery Man in Chennai
சென்னையில் சொமேட்டோ ஊழியர் தாக்கப்படும் காட்சிகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சொமேட்டோ ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர், சஞ்சய்(28). சொமேட்டோவில் (Food Delivery Man at Zomato) உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். அயப்பாக்கம் அருகில் இன்று வழக்கம்போல ஆர்டர் எடுப்பதற்காக நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் சஞ்சய்யை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான சிறிய கத்தியாலும் குத்தி உள்ளனர். சஞ்சய் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்ற நிலையில், அவரை விடாது துரத்திய அந்த கும்பல், சஞ்சயை பலமாக தாக்கியதோடு அவரது தலை, காது, கழுத்து பகுதிகளில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனால், ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய்யை கண்டு அப்பகுதினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தகவலறிந்த அவரது உறவினர்கள், திருமுல்லைவாயல் போலீசார் ஆகியோர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்பொது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், சொமேட்டோ ஊழியர் சஞ்சய் இருசக்கர வாகனத்தில் நின்றிருப்பதும், போதையில் இருந்த வாலிபர்கள் அங்கு வந்து சரமாரியாக அவரை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சஞ்சயின் தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தலைமறைவாக உள்ள இவரது தம்பியை தேடி அலைந்த இக்கும்பல் சஞ்சய்யை இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், கோகுல், ஆர்யா, பாலன், மணி ஆகியோர் என்பதும் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சென்னையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சொமேட்டோ ஊழியர் மீது கொடூரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியினரை அச்சமடைய செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 240 கொலைகள்! கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல் - RTI About Tirunelveli Murder Cases

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.