ETV Bharat / state

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கவலைக்கிடம்.. சென்னையில் இருந்து விழுப்புரம் விரைந்த மருத்துவக்குழு! - vikravandi mla Pugazhenthi - VIKRAVANDI MLA PUGAZHENTHI

vikravandi mla Pugazhenthi: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் விழுப்புரம் விரைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:30 AM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்த நிலையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, தலைச் சுற்றி கீழே விழுந்தால் உடனடியாக அவர் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை எம்எல்ஏ புகழேந்தியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து மருத்துவ குழுவினர் விழுப்புரம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோரும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.