ETV Bharat / state

தேனி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் அதிரடி ரெய்டு! சிக்கிய ரொக்கப் பணம் எவ்வளவு? - RAID IN THENI REGISTRAR OFFICE

தேனி மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத சுமார் 43,900 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலகம்
தேனி மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலகம் (Credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 10:49 PM IST

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் பத்திரபதிவு செய்யும் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் பெறுவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாலை சுமார் 2.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுந்தரராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களை அதிகாரிகள் விசாரணை செய்து பின் வெளியே அனுப்பினர். இந்த சோதனையில் தேனி சார்பதிவாளர் மாரிஸ்வரியிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. பின்னர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 43,900 பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: சென்னை சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

இந்நிலையில் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது தெரியாமல் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பின் தகவல் அறிந்து பொதுமக்கள் திரும்பி சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அலுவலகம் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits-ETV Bharat Tamil Nadu)
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.