ETV Bharat / state

நேற்று டிரைவர்.. இன்று கிளீனர்.. மதுரை ஆம்னி பேருந்து நிலையத்தில் அரங்கேறுவது என்ன? - Omni Bus Cleaner Attacked Issue

Omni Bus Cleaner Attacked Video: மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கட்டி வைத்து தாக்கப்பட்ட நிலையில், அதே பேருந்தின் கிளீனரும் தற்போது கட்டி வைத்து தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி மதுரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டி வைத்து தாக்கப்பட்ட ஆம்னி பேருந்து கிளீனர்
கட்டி வைத்து தாக்கப்பட்ட ஆம்னி பேருந்து கிளீனர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 7:52 PM IST

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர், அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்றதாகவும், அந்த பயணிகளை ஏற்றியதற்கான பணத்தை தனது போன் மூலமாக பெற்றுக் கொண்டு பேருந்து உரிமையாளரிடம் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆம்னி பேருந்து கிளீனர் தாக்கப்பட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்ற விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மதுரையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர்.

மேலும், விசாரணையை நடத்துவதாகக் கூறி ஓட்டுநரின் கைகளை பின்னோக்கி ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து நீண்ட நேரம் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்றைய தினம் (ஜூலை 24) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தாக்கப்பட்டதாக கூறப்படும் ஓட்டுநர் பால் கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய காவலர்கள் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட அதே ஆமினி பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள், அவர்களது நிறுவனத்தின் ஆம்னி பேருந்து கிளீனரை கட்டி வைத்து தாக்கி விசாரணை நடத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் மூன்று லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கட்டி வைத்து தாக்கப்பட்ட நிலையில், அதே பேருந்தின் கிளீனரும் தற்போது கட்டி வைத்து தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி மதுரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.