ETV Bharat / state

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்; ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்! - THIRUVALLUVAR UNIVERSITY

THIRUVALLUVAR UNIVERSITY CONVOCATION: வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் சிறப்பு விருந்தினராக தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ராமதாஸ் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா (CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 10:47 PM IST

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 37 ஆயிரத்து 886 இளங்கலை மாணவர்களும், 5 ஆயிரத்து 268 முதுகலை மாணவர்களும், 111 எம்பில் மாணவர்களும் என மொத்தம் 43 ஆயிரத்து 735 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். மேலும் இதில், 249 பேர் முனைவர் பட்டம், 42 பேர் இளங்கலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண்ணும், 34 பேர் முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண்ணும் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகளையும், பட்டங்களையும், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, பல்கலைகழக துணைவேந்தர் ஆறுமுகம், பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ராமதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர் உரை: இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர், சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரான ஜி.ஏ.ராமதாஸ் மேடையில் பேசுகையில், "புகழ்பெற்ற புலவர் திருவள்ளுவர் பெயரில் இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருவது சிறப்புக்குரியது. மனித இனத்துக்கு தேவையான பல்வேறு கருத்துகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். அவர் கல்வியை பற்றி கூறிய, 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பது போல், உங்களை நிருபிக்கும் வாய்ப்புகள் இந்த உலகில் அதிகம் இருக்கிறது. எனவே உங்கள் எண்ணம் முழுவதும் கனவுகளை அடைவதில்தான் இருக்க வேண்டும்.

இந்தியாவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும்: மேலும் இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேலான பல்கலைக்கழகம் உள்ளது. அவற்றில் ஆண்டுக்கு 25 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை சீனாவுடன் ஒப்பிடும்போது குறைவுதான். ஏன்னென்றால் இந்திய மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கு அதிகமானவர்கள்தான் பட்டப்படிப்பு படிக்கின்றனர். இந்நிலையில், இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விகொள்கையில் பாடத்திட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை சர்வதேச அளவில் தரக்கூடியது. முன்பெல்லாம் வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடு என அமெரிக்காவை கூறுவார்கள். ஆனால் தற்போது அது இந்தியாவுக்கு மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கவும், நிதியுதவி அளிப்பதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வியாபாரங்களின் மையமாக இந்தியா மாறிவருகிறது. இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 1.22 லட்சமாக மாறியுள்ளது.

பல்கலைகழகங்களும், ஆராய்ச்சிக்கூடமும்: நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படுகின்றன. ஐஐடிகள் பல வெளிநாடுகளில் தங்களது வளாகங்களை திறந்துவருகின்றன. உலகளவில் ஆராய்ச்சிகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது. பட்ஜெட்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிகப்படியான நிதியை வழங்கி வருகிறது. இதனால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு முன்னுரிமைகள் பல வழங்கப்படுகிறது. இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதில், ஆராய்ச்சிக்கான நிதியுதவியை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களும் பெற்றோர்களும்: மேலும், மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் அவர்களது பெற்றோர், ஆசிரியர்களின் தியாகங்கள் இருப்பதை மாணவர்கள் மறந்துவிட கூடாது. இந்த நாடு மாணவர்களாகிய உங்களிடம் இருந்து நிறைய சாதனைகளை எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்வேல் முருகன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்தனம், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மூடப்படுகிறதா 1.50 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள்? தன்னார்வலர்கள் கவலை! -

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.