ETV Bharat / state

“விஜய் எங்கள் சமுதாயம்”.. விஜய்க்கு முதல் ஆதரவு தெரிவித்த அமைப்பு.. வெ.மு.க கூறுவது என்ன? - Vellalar munnetra kazhagam - VELLALAR MUNNETRA KAZHAGAM

Vellalar munnetra kazhagam: விஜய் கட்சிக் கொடியை மாற்ற வேண்டும் என வெ.மு.க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விஜய் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் குடும்பத்தில் உள்ளதில் பெருமை என அக்கட்சித் தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

வெமுக கட்சி தலைவர் ஹரிஹரன் பேட்டி
வெமுக கட்சி தலைவர் ஹரிஹரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 8:15 PM IST

திருச்சி: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். மேலும், தவெக கட்சிக்கென பிரத்யேக பாடலையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கட்சிக் கொடி குறித்து பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். முதலாவதாக பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடியில் உள்ள யானையை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கட்சியின் அண்ணா சரவணன், தவெக கொடியை மாற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஹரிஹரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த அறிக்கையில், "கடந்த 2016ஆம் ஆண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வளர்ந்து வரும் எங்கள் கட்சி, முறைப்படி பத்திர பதிவுத்துறையில் இயக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் இயக்கத்தின் கொடியாக மேலும், கீழும் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள் வண்ணமும் இருக்கும்.

இதை எங்கள் நிகழ்வுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். சமீபத்தில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தினார். அது அப்படியே எங்கள் இயக்கத்தின் கொடியாக உள்ளது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கும், கொடி அறிமுகம் செய்ததற்கும் இடையே 2 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இந்த நேரத்தில் கட்சிக் கொடி, வண்ணம், சின்னம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

எத்தனையோ வண்ணங்களும், சினைங்களும் இருக்கையில், ஏற்கனவே வருபவற்றை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் கட்சிக் கொடி வண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எங்கள் அமைப்பு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கொடியை பயன்படுத்தி வருகிறோம். விஜய் தன் கட்சிக் கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும். இல்லையென்றால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்" என கூறியிருந்தார்.

இதனையடுத்து, திருச்சியில் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், வெள்ளாளர் சமூகத்தின் கொடியின் நிறமும் ஒரே மாதிரி உள்ளதால் சர்ச்சைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து இருந்துள்ளது.

வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் குடும்பத்தில் உள்ளதால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் ஒரு மிகப்பெரிய உச்ச நடிகர், அத்தனை மதங்களையும் கடந்து, அத்தனை சாதிகளையும் கடந்து ஒரு பொதுவான மனிதனாக உள்ளதால் இன்று ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார்.

எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருடைய கட்சி மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு எங்கள் சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம். தேர்தல் நேரத்தில் அவருக்கான ஆதரவை பொதுக்குழுவைக் கூட்டி அதில் தெரிவிப்போம். திருச்சியில் நின்று அவர் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வரவேற்போம். விஜய் கட்சி ஆரம்பித்தது தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இது போன்ற சர்ச்சைகள் கிளப்பப்படுகிறது” என கூறினார்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “25 வருஷமா எதுக்கும் குரல் கொடுக்கல.. இப்போது ஏன் திடீர் அரசியல் ஆசை?” - விஜய்க்கு கருணாஸ் சரமாரி கேள்வி! - Actor karunas questions vijay

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.