ETV Bharat / state

“ஆண்டுக்கொரு பிரதமர் என நான் கூறினேனா?” - திருமாவளவன் விளக்கம்! - Lok sabha election 2024

Thirumavalavan on INDIA alliance PM candidate: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா கூட்டணி' வெற்றி பெற்றால் பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 7:31 PM IST

Updated : Jun 2, 2024, 8:03 PM IST

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், அமைச்சர் சேகர் பாபு உடன் பார்வையிட்டார்.

விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன் கூறியதாவது, “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நவீன கண்காட்சியகத்தை அமைச்சர் சேகர் பாபு உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிய புகைப்படக் கண்காட்சியை அமைத்தார்.

இதை கலைஞரின் வரலாறு என்று சொல்வதை விட, தமிழரின் வரலாறு என்று சொல்லுவது தான் பொருத்தமாக இருக்கும். கலைஞர் ஒரு போராளியாக பிறந்து, போராளியாக வாழ்ந்து, போராளியாகவே மறைந்தார். கடுமையான விமர்சனங்களைத் தாண்டி, அவதூறுகளைக் கடந்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய பங்கு என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்" எனக் கூறினார்.

தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "கருத்துக் கணிப்புகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்துவது இல்லை. 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி இந்தியாவை அதலபாதாளத்தில் சரிய வைத்துள்ளது என்பது தான் கசப்பான உண்மை. நாளை மறுநாள் அதற்கு ஒரு முடிவு தெரியும்.

மக்கள் எழுதிய தீர்ப்பு ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தியாவை சூழ்ந்த இருள் அகல உள்ளது. புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி மலர உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு மகத்தானது. தமிழ்நாட்டில் தாமரை மலர இடமே இல்லை. 40க்கு 40 என திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும்" என பதிலளித்தார்.

அதன் பின்னர், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இதில் ஜனநாயகமான புரிதல் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். இந்த குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் போது, பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்க இடமுள்ளது" என்றார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று திருமாவளவன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "அதை நான் கூறவில்லை. ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று கூறி இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்தார். மேலும், அவரே இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அதற்கு பதில் கூறும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, சமூக நல்லிணக்க பாதிப்பு உள்ளிட்டவை ஒரே ஒரு பிரதமர் ஆட்சியில் இருந்த போது நடந்துள்ளது. எனவே தான் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என இருந்தால் ஒன்றும் தவறு இல்லை என்று கூறினேன். அது ஜனநாயக விரோத முடிவும் அல்ல" என்று அவர் கூறியதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக தலைமையில் மாற்றமா? டிடிவி தினகரன் அளித்த பதில்!

Last Updated : Jun 2, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.