கோயம்புத்தூர்: கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை வானதி சீனிவாசன் பேசுகையில், “பெண்கள் சங்கம் என்பது ஆன்மீகம், கலாச்சாரம், தேசியம், சகோதரத்துவம், போன்றவற்றுக்காக நடத்தப்படுகின்ற மாநாடு.
இதில், கட்சியின் பெண்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள், பொதுவான பெண்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
கேலோ இந்தியா என்ற நிகழ்வு ஒரு தேசிய அளவிலான நிகழ்வு மத்தியில் விளையாட்டுத் துறை அமைச்சகம் பெருமளவு நிதி உதவி செய்துள்ளனர். பிரதமர் தான் இதைத் துவக்கி வைத்திருக்கிறார். இந்த விளையாட்டுப் போட்டிகள், சென்னையில் மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.
கோவையில் இந்த போட்டிகள் நடந்து கொண்டிருப்பதற்காக பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் எதிலுமே பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை. இதுவே சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் விளம்பர பேனர்களில் இந்த மாநில முதல்வர் புகைப்படத்தை மத்திய அரசு வைத்துள்ளது.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக கூட செஸ் ஒலிம்பியாட் நடக்கும் பொழுதும், இது போன்ற பிரச்சனை செய்தார்கள். மேலும், கோவையில் வைத்திருக்கக் கூடிய அனைத்து பேனர்களிலும் உடனடியாக பிரதமர் படத்தை வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் எங்கள் கட்சியினர் ஒவ்வொரு விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டுவார்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் என்றால் சட்டமன்றத்தில் எதற்காக எங்களது கேள்விக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள், ஒவ்வொரு நாளும் திமுக அரசியல் என்பது பாஜகவை வைத்துத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சி அரசியல் என்பது பாஜகவை எதிர்ப்பதற்காகத்தான். பாஜக இல்லை என்றால் அரசியல் இல்லை என்று அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் இயக்கம் மற்றும் அதில் தொடர்புடைய இயக்கங்களும் தீண்டாமைக்கு எதிராக போதுமான நடவடிக்கை செய்து வருகிறோம். இந்தியா கூட்டணி உருவாகும் போது நாங்கள் சொன்னோம், இது நிலைக்காது, இவர்களுக்கு பொதுவான குறிக்கோள் எதுவும் இல்லை அதற்கான செயல் திட்டமும் இல்லை.
இசைஞானி இளையராஜாவின் அருமை மகள் மிகச் சிறந்த பாடகி தன்னுடைய குரலுக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கியவர். ஆனால் அற்புதமான பெண்மணி இல்லை என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவர்களது குடும்பத்திற்கு எங்களது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
பின்னர் விஜய் கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு? யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். மக்களுக்கு எப்படிப் பணி செய்கிறார் என்பதைப் பார்ப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நிதிஷ் குமார் திட்டம் என தகவல்.. காங்கிரஸ் ரியாக்ஷன் என்ன?