ETV Bharat / state

'ஜெயலலிதாவிற்கு 'இந்துத்துவா' மீது நம்பிக்கை..ஜூன் 4-க்கு பின் ராகுல் காந்தியின் அரசியல்..' - எல்.முருகன் - L Murugan - L MURUGAN

L.Murugan vs Rahul Gandhi: 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக குற்றம்சாட்டிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜெயலலிதாவிற்கு இந்துத்துவா மீது நம்பிக்கை இருந்ததாகவும், ஜூன் 4-க்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்' என்று தெரிவித்துள்ளார்.

எல்.முருகன், ராகுல் காந்தி புகைப்படம்
எல்.முருகன், ராகுல் காந்தி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 9:04 AM IST

சென்னை: 'பிரதமர் தியானம் செய்ய கோயிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறலாகும்' என்று கேள்வி எழுப்பிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் தியானத்தை யாரால் எப்படி தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

மைசூரில் இருந்து சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறலா? என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு, “பிரதமர் தியானம் செய்ய கோயிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறலாகும் என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தில் உள்ளன. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து செயல்களிலும் கருத்து சொல்லக்கூடாது. பிரதமர் தியானத்தை யாரால், எப்படி தடுக்க முடியும் என்றார்.

அயோத்தி ராமர் கோயில் கட்ட உறுதியுடன் இருந்த ஜெயலலிதா: தொடர்ந்து பேசிய அவர், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் ஆன்மீக பணிகளை ஈடுபட்டுள்ளார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்தியாவில் ஒவ்வொருவரின் கனவு. ஜெயலலிதாவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

'இந்துத்துவா' மீது ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை?: அதேபோல், பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்றார். சட்டப்பிரிவு 370 எப்போது நீக்கப்படும் என மாநிலங்களவையில் அவர் பேசியிருக்கிறார். ஜெயலலிதா தொடர்ந்து, இந்துத்துவா (Hindutva) மீதும், ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

தமிழகத்தில் இருப்பவர்கள் ஒடிசா அரசியலை பற்றி தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். ஒடிசா முதலமைச்சரை இயக்குவது, ஒரு அதிகாரி. அவர் தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் எடுத்து கூறியிருக்கின்றனர். அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.

போதைப்பொருள் வழக்கு குறித்து கேட்டபோது, சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா என்பதும் தெரியவில்லை.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: போக்குவரத்து ஊழியருக்கும், காவலருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில், தமிழக அரசு இருவரையும் அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் செயலற்ற முதலமைச்சராக இருப்பதற்கு இந்த சம்பவம், ஒரு உதாரணம். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

Go Back Modi குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மக்கள் அனைவரும் Welcome Modi என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டில் பிரதமர் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருக்கின்றது. தமிழக அரசியலில் பாஜக மிகப் பெரிய வரலாற்றை படைக்கப்போகிறது. ஜூன் 4ஆம் தேதி பாஜகவுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இருக்கப் போகிறது. அந்த நாளுக்கு பிறகு, அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். இனி எந்தக் காலத்திலும் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது. இதற்கான விடை ஜூன் 4-ல் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி! - Narendra Modi In Kanyakumari

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.