டெல்லி: இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் ஒரு முக்கிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்த ஆதாரை புதுப்பிக்குமாறு இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ஆதார் இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 2023 என்று இருந்தது.
இதனையடுத்து மார்ச் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன விவரங்களைப் புதுப்பிக்கலாம்?: ஜூன் 14 ஆம் தேதி வரை யுஐடிஏஐ இணையதளத்தில் ஒருவர் தங்கள் பெயர், புகைப்படம், மற்றும் பிற மாற்றங்களைப் புதுப்பிக்கலாம். நீங்கள் ஆதார் சேவை மையங்கள், அல்லது போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றிற்குச் சென்றால் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
அருகில் உள்ள ஆதார் மையங்களில் எங்கு உள்ளது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களது மாவட்டத்தின் பெயரை உள்ளீடு செய்தால் உங்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களைக் காண்பிக்கும். அதேபோல் உங்கள் ஊரின் பின் கோடு எண் (PIN code) மூலமும் அருகில் உள்ள ஆதார் மையத்தைப் பற்றிய தகவலையும் நீங்கள் சேகரிக்க முடியும்.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் புதுபிக்க:
1. முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஓபன் செய்யவேண்டும்.பின்னர் உங்கள் ஆதார் எண்னை கொடுக்கவேண்டும்.
2. ‘முகவரியைப் புதுப்பிக்கத் தொடரவும்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. பின்னர் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை(OTP) உள்ளீடு செய்து நுழையவும்.
4. இதன் பின்னர் ஆவணம் புதுப்பிப்பு (Document Update) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்லிங்கில் கிளிக் செய்யவும்.
6. கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவேற்றவும்.
7. பின்னர் சப்மிட் (submit) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
8: 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்களது புதிய கோரிக்கை ( update request) ஏற்கப்படும்.
இதையும் படிங்க: Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!