ETV Bharat / state

"ஒன்றிணைந்து செயல்படுவோம்" - நடிகர் அஜித்துக்கு அழைப்பு விடுத்த உதயநிதி!

கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள நடிகர் அஜித் குமாருக்கு, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், அஜித் குமார்
உதயநிதி ஸ்டாலின், அஜித் குமார் (Credits - udhayanidhi stalin twitter)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

சென்னை: துபாயில் நடைபெறவுள்ள GT3 நடிகர் அஜித் குமார் பங்கேற்கவுள்ளார். அதற்காக அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ள நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித் குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை 'அஜித் குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிங்க: "அமரன் படத்தின் விளம்பரத்துக்கு கமல் பெயரை பயன்படுத்த மாட்டேன்" - இயக்குனர் ராஜ்குமார் திட்டவட்டம்!

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பார்முலா 4, Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.