ETV Bharat / state

“திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்?”- உதயநிதி கிண்டல்!

கருணாநிதி 96 வயது வரை மக்களுக்காக உழைத்தவர். திட்டங்களுக்கு அவர் பெயரை வைக்காமல் கூவத்தூரில் ஊர்ந்து சென்ற கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா
இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 48 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர். டி. சேகர், தலைமை வகித்தார். மேலும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர்,
பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், செந்தில்குமார், வ.பெ. சுரேஷ், ஜெயராமன், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்த நிலையில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு (Credits- ETV Bharat Tamil Nadu)

நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் 48 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், “தமிழகத்தில் சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. அண்ணா ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். கலைஞர் மகளிர் உதவி தொகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கபடுவதன் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்கள் பயனடைகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் படித்து, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: திருப்பூருக்கு மவுசு குறையுதா? பின்னலாடை தொழிலை வளர்த்தெடுக்கும் அண்டை மாநிலங்கள்

மேலும் நமது ஆட்சியை ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களும் கொண்டாடுவதை எடப்பாடியால் ஏற்று கொள்ள முடியவில்லை. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாக எடப்பாடி கூறுகிறார். தமிழக மக்களுக்காக 96 வயது வரை உழைத்தவரின் பெயரை வைக்காமல் கூவத்தூரில் ஊர்ந்து சென்ற கரைப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும்.

மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை வைத்தால் எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? அதனையும் ஏற்று கொள்ள மாட்டார். தற்போது அவருக்கு மோடி அல்லது அமித்ஷா பெயரை வைக்க வேண்டும்.
கலைஞர் 96 வயதிலும் மக்கள் பணியாற்றியவர். திமுக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் 2026ஆம் ஆண்டு தேர்தலிலும் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தமிழகத்தில் 7 ஆவது முறையாக ஆட்சியில் நாம் அமருவதற்கு நாம் ஒவ்வொருவரும் நமது ஆட்சியில் செய்யும் திட்டங்கள் குறித்து வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துச் கூற வேண்டும். இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மருது கணேஷ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் நரேந்திரன், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் சுபேர்கான், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், திருமண மணமக்கள் உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.