ETV Bharat / state

சூரி பட பாணியில் பரோட்டா பந்தயம்; வைரலாகும் திருச்செந்தூர் பரோட்டா கடை போஸ்டர்! - Paratha Game In Thoothukudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 9:53 PM IST

Paratha Game In Thoothukudi: திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எதிர்புறம் உள்ள பரோட்டா கடையில், ஒருவர் 32 பரோட்டாக்கள் சாப்பிட்டு ஜெயித்தால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு காசு கொடுக்க தேவையில்லை என வைக்கப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போஸ்டர்
வைரலாகும் போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தர், இசக்கிமுத்து. இவர்கள் இருவரும் இணைந்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு எதிரே அன்னை நைட் கிளப் என்ற இரவு நேர உணவகத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடையின் வியாபாரத்தை பெருக்கும் விதமாக சினிமா பாணியில் பரோட்டா சாப்பிடும் பந்தயம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 32 பரோட்டாக்களை ஒருவர் சாப்பிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டாம். மாறாக, கடையின் உரிமையாளர் அந்த 32 பரோட்டாவிற்கான பணத்தை சாப்பிட்டவருக்கு தருவார். அதை சாப்பிட முடியாதவர்கள் எத்தனை பரோட்டா சாப்பிட்டார்களோ, அந்த பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், "நாங்கள் முதலில் பாஸ்ட்புட் உணவுகளை தான் விற்பனை செய்து வந்தோம். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பரோட்டாவை தொடங்கினோம். அதில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் பரோட்டா சூரி அண்ணன் காமெடி நினைவுக்கு வந்தது. அதை வைத்து ஏதாவது வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படி உருவானது தான் இந்த 32 பரோட்டா போட்டி.

இந்த போட்டியில் கடை ஆரம்பித்த அன்று மட்டும் ஒரு இளைஞர் 32 பரோட்டா சாப்பிட முயற்சித்தார். ஆனால் அவரால் 27 பரோட்டா தான் சாப்பிட முடிந்தது. இருந்தாலும் முதல் நாள் முதல் வாடிக்கையாளர் என்பதால் அவரிடம் பணம் பெறவில்லை.

மேலும், அவருக்கு நாங்கள் குளிர்பானம் எல்லாம் வாங்கி கொடுத்து உற்சாப்படுத்தி அனுப்பி வைத்தோம். அதன்பின்னர் யாரும் இந்த போட்டிக்கு வரை வரவில்லை. எத்தனை பேர் இந்த போட்டிக்கு வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சினிமாவில் கோடு போடுவது போல் இல்லை. மொத்தமாக 32 பரோட்டா தயார் செய்து அவர்கள் முன்னால் வைத்து விடுவோம். அதை சாப்பிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்" என்று தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னை ஏர்போட்டில் பிக்கப் பாயிண்ட் மாற்றம்; பயணிகள் அவதி என டாக்சி டிரைவர்கள் குற்றச்சாட்டு - chennai airport parking issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.