ETV Bharat / state

ஏரி போல் காட்சியளிக்கும் சென்னை ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கடும் அவதி! - RAIN IN GST CHENNAI

சென்னை ஜிஎஸ்டி சாலையில் முழங்காலுக்கு மேல் தேங்கியுள்ள மழை நீரில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி பழுதாகி வருவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கிய சாலையில் வாகனத்தை தள்ளி செல்லும் காட்சி
மழைநீர் தேங்கிய சாலையில் வாகனத்தை தள்ளி செல்லும் காட்சி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 3:02 PM IST

Updated : Nov 30, 2024, 3:18 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது சாலைகளில் தேங்கியுள்ளது. இந்த நிலையில், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் கடல் போல புரண்டு ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் வாகன ஓட்டிகள் இறங்கும் பொழுது அதிகப்படியாக தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மழை நீரில் இறங்கி வாகனங்களை தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கு மத்தியில், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஊழியர்கள் கொட்டும் மழையில் தேங்கி நிற்கும் மழை நீரை டிராக்டர்கள் மூலம் ராட்சத மோட்டார் பம்புகளை வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்: கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

ஆனாலும், தொடர் மழையினால் மழை நீரானது அதிகப்படியான அளவில் புரண்டு ஓடுவதினாலும், அதிவேகமான காற்றினாலும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Nov 30, 2024, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.