ETV Bharat / state

சேலத்தில் அக்கா தம்பி வெட்டி கொலை.. பின்னணி என்ன? - SALEM SISTER BROTHER MURDER ISSUE

சேலத்தில் உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கா, தம்பி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அக்கா மற்றும் தம்பி
உயிரிழந்த அக்கா நவீனா மற்றும் தம்பி சுகன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 12:31 PM IST

சேலம்: சேலத்தில் அக்கா, தம்பி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பனைமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நவீனா என்ற மகளும், சுகன் என்கிற மகனும் உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நவீனா 12ஆம் வகுப்பும், சுகன் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களின் தந்தை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்தில் பூப் பறிக்கச் சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது சித்தப்பா தனசேகர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு தந்தை ராஜா ஓடிவந்து பார்த்த போது மகனும், மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு வந்த ராஜாவையும், தனசேகரன் வெட்டியுள்ளார். இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அக்கா, தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய ஆதாய கொலைகள்.. பல ஆண்டுகளுக்கு பிறகு 12 பேர் கைது.. பின்னணி என்ன

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனைமரத்துப்பட்டி போலீசார், உயிரிழந்த அக்கா, தம்பி ஆகியோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனசேகரின் அப்பாவும், ராஜாவின் அப்பாவும் அண்ணன் தம்பிகள் எனவும், பங்காளி முறையில் உறவினரான ராஜாவிற்கும், தனசேகரனுக்கும் ஏராளமான கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தனசேகரன் ராஜாவின் குழந்தைகளை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது, கொலை செய்துவிட்டு தப்பியோடிய தனசேகரை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் பனமரத்துப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.