ETV Bharat / state

கூடலூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது..! - gudalur

Country gun: கூடலூர் அருகே நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

country gun
நாட்டு துப்பாக்கி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 10:35 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடு காணி சோதனை சாவடி அமைந்துள்ளது. தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, இந்த சோதனை சாவடி வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களையும், போலீசார் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆய்வாளர் சங்கமேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு பேர் சோதனை சாவடியைக் கடக்க முயன்றனர். இதனையறிந்த போலீசார் அவர்கள் அழைத்து விசாரித்த போது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார். அவர்கள் இருவரையும் தேவாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில் தேவாலா ஹாட்டி பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் சசிகுமார் என்ற இருவரும் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள மருதா என்ற இடத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய்க்கு புதிய ரக நாட்டுத் துப்பாக்கியை வாங்கியதாகவும், அதனைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த துப்பாக்கியானது சசிகுமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, கேரளாவில் துப்பாக்கியை விற்பனை அந்த நபர் யார். துப்பாக்கியை விற்பனை செய்த நபருக்கு நக்சலைட்டுகளுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. மேலும் துப்பாக்கியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம்; கடல் விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.