ETV Bharat / state

பெரம்பலூரில் பைக் மீது மினிபஸ் மோதி விபத்து; லிப்ட் கேட்டு வந்தவர் உள்பட இருவர் உயிரிழப்பு! - பெரம்பலூர் மக்கள் போராட்டம்

Perambalur Minibus accident: பெரம்பலூர் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற மினிபஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலூரில் அதிவேகமாக சென்ற மினி பஸ் பைக் மீது மோதி விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 7:46 AM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன், கரிகாலன்(45). விவசாயியான இவர், ஆலம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனிடையே சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோசியரான சோலைராஜா (73) என்ற முதியவர், ஆலம்பாடி கிராமத்திலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக கரிகாலன் வந்த இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து, பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில், பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் நோக்கி அதிவேகமாகச் சென்ற மினிபஸ் கரிகாலனும், சோலைராஜாவும் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கரிகாலனும், சோலைராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த கரிகாலனின் உறவினர்கள் உள்ளிட்ட ஆலம்பாடி பகுதி பொதுமக்கள், சம்பவ இடத்தில் திரண்டு விபத்திற்கு காரணமான மினிபஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து மினிபஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உயிரிழந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயியும், அவரிடம் லிப்ட் கேட்டு வந்த ஜோசியரும் மினிபஸ் மோதி உயிரிழந்த சம்பவம் இருவரது குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் அரசுப் பள்ளி ஆசிரியை கொலை வழக்கு: சக ஆசிரியருக்கு பிப்.23ஆம் தேதி வரை சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.