ETV Bharat / state

சென்னையில் வேகமாக சென்ற காரை மறித்த போலீசார்..அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்! - CHENNAI ACCIDENT

பெருங்களத்தூர் மேம்பாலத்திலிருந்து வேகமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்த காரை போக்குவரத்து போலீசார் திடீரென வழிமறித்ததால், பின்னாள் அதிவேகமாக வந்த கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளன  வாகனம்
விபத்துக்குள்ளன வாகனம் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 4:35 PM IST

சென்னை: பெருங்களத்தூர் மேம்பாலத்திலிருந்து வேகமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்த காரை போக்குவரத்து போலீசார் திடீரென வழிமறித்ததால், பின்னாள் அதிவேகமாக வந்த கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்லும் மேம்பாலங்கள் வழியே செல்கின்றன. அதே நேரத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து போலீசார் மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் கீழிறங்கும் இடத்தில் வாகனங்களை மறிக்கின்றனர். வாகனம் சரிவில் இறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென காவலர்கள் மறிப்பதை சில நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனிக்காமல், திடீரென கவனித்து வாகனத்தின் வேகத்தை குறைக்கின்றனர். இதனை கவனிக்காமல் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாவது உண்டு.

விபத்துக்குள்ளன காட்சிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூரை நோக்கி செல்லும் மேம்பாலம் இறக்கத்தில் பெருங்களத்தூர் போக்குவரத்து போலீசார் வாகன தண்ணிகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வண்டலூரை நோக்கி கார் ஒன்று மேம்பாலத்திலிருந்து அதிவேகமாகக் கீழே இறங்கி கொண்டு இருந்தது.

இதையும் படிங்க: மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை விசாரணைக்கு அழைத்தபோது தாக்கிய காவலர்கள்...சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு!

அதனை திடீரென வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் கையை நீட்டி காலை நிறுத்துமாறு வழி மறைத்துள்ளார். இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் திடீரென வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காரின் பின்புறம் வேகமாக மோதியது.

நல்வாய்ப்பாக இரண்டு கார்களிலும் சென்ற நபர்களுக்கு எந்த ஒரு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேம்பாலத்தின் இறக்கம் மற்றும் வாகனங்கள் அதிகம் செல்லும் இடங்களில் முறையாக தடுப்புகளை வைத்து வாகன தணிக்கையில் ஈடுபடாமல், இதுபோன்று திடீரென குறுக்கே சென்று வாகனங்களை வழி மறைப்பதால் பெரும் விபத்து ஏற்படும் எனவே இது போன்ற முறைகளை போக்குவரத்து காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.