சென்னை: தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று இருந்தாலும், சில தொகுதியில் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாமல் மந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு சில தொகுதியில் மக்கள் வாக்களிக்காமல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடி வரை வந்து ஆதங்கத்துடன் திரும்பச்சென்றனர். தற்போது வரை எந்த வாக்குச்சாவடியிலும் வன்முறை நடைபெறவில்லை எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார்.
அரசு சார்பில் வாக்களிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருந்தனர். அப்படி இருக்க, மத்திய சென்னைக்குட்பட்ட ஸ்டெல்லா மேரி கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் குடும்பத்துடன் வந்தனர். அதில் 15 பேர் வாக்களித்து இருந்தனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்கும் பொழுது, எப்பொழுதும் குடும்பமாக வாக்களிக்க வருவதாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதால், சிறுவர்கள் உட்பட வீட்டில் உள்ளவர்களை அழைத்து வந்து வாக்குச் செலுத்த வந்தோம் என தெரிவித்திருந்தனர். 21 பேர் குடும்பமாக வாக்களிக்க வந்தவர்களை மற்ற வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் 11 மணி நிலவரம்: அதிகபட்சமாக திரிபுராவில் 34.54% வாக்குப்பதிவு! - Lok Sabha Election 2024