தேனி: கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் நேற்று (அக்.4) மதியம் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஓ.ஆர்.ராமச்சந்திரன் அரசியல் பயணம்: ஓ.ஆர்.ராமச்சந்திரன் வழக்கறிஞராக இருந்து பின்னர், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ்(INC) கட்சி வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக பணியாற்றிவர்.
மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் பணி குழு தலைவராகவும், கம்பம் நகர பிரமலை கள்ளர் சமுதாய தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக நேற்று மதியம் காலமானார்.
இதையும் படிங்க: AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
அரசியல் தலைவர்கள் மரியாதை: இந்நிலையில் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இவரைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் டிடிவி தினகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கடைகள் அடைப்பு: ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் வர்த்தக சங்கத்தின் சார்பாக கம்பம் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்