ETV Bharat / state

"பாதுகாப்பு குறைபாடு உறுதி" - திருச்சி என்ஐடி விவகாரத்தில் பகீர் கிளப்பிய கலெக்டர்! - Trichy NIT Student Harassment Issue

Trichy NIT Student Harassment Issue: திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் ஒப்பந்த ஊழியரால் பாலியல் வன்முறைக்கு ஆளான விவகாரத்தில், விடுதியில் பாதுகாப்பு குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி என்ஐடி, எஸ்பி வருண்குமார் மற்றும் ஆட்சியர் பிரதீப்குமார்
திருச்சி என்ஐடி, எஸ்பி வருண்குமார் மற்றும் ஆட்சியர் பிரதீப்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 2:29 PM IST

திருச்சி: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் நேற்று (ஆக.29) இன்டர்நெட் சரி செய்வதற்காக சென்ற கல்லூரியின் ஒப்பந்த பணியாளரான முதுகுளத்தூரைச் சேர்ந்த கதிரேசன்(38), விடுதி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்பட்டது.

திருச்சி எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் பேட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

அப்போது அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டு சக மாணவிகளிடமும், தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விடுதி வார்டனிடம் முறையிட்டபோது, வார்டன் மாணவிகளை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதனால், மாணவியிடம் அத்துமீறிய ஒப்பந்த ஊழியரைக் கைது செய்யக் கோரியும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசிய விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கதிரேசன் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் 332, 75/1, 4/U TNPHW உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

ஆனாலும், என்ஐடி கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையை கண்டித்தும் சக மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த ஏடிஎஸ்பி கோபால் சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதையேற்காத மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என முழக்கமிட்டனர்.

அப்போது, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சாத மாணவர்கள் தொடர்ந்து போராடினர்.

அப்போது திருச்சி எஸ்பி வருண்குமார் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினார். விடுதிக்காப்பாளர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்பொழுதுதான் போராட்டத்தைக் கைவிடுவோம் என மாணவர்கள் குறிப்பிட்டனர். பின்னர், எஸ்.பி உடனடியாக விடுதி காப்பாளர் மற்றும் என்ஐடி இயக்குநர்களிடம் கலந்து ஆலோசித்து வார்டன் தேவியை மன்னிப்பு கேட்க வைத்தார். அதன் பின்னர், என்ஐடி நிர்வாகம் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது எனது உறுதியளித்ததையடுத்து சுமார் 18 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி, "இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் கொடுத்த கோரிக்கைகள் என்ஐடி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வெளியிலிருந்து பணியாளர்கள் வந்தால் வார்டன் உடனிருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்பட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தியுள்ளேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தொடர்பு கொள்ள உதவி எண் மற்றும் எனது வாட்ஸ்அப் எண்ணும் கொடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பு குறைபாடு உறுதி: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறுகையில், "திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவி மீதான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை ஏற்கனவே கைது செய்துவிட்டோம். வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கூறிய நிலையில், நிர்வாகத்திடம் இதுதொடர்பாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுப்பார்கள்.

பாலியல் தொடர்பான புகார் இதுவரையிலும் வரவில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு வரும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். சிசிடிவி செயல்படவில்லை என்றால் அதனை மேம்படுத்துவதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம்.

பெண்கள் விடுதியில் நுழைய ஆண்களை அனுமதிப்பதில்லை, இதுபோன்று எலக்ட்ரிஷன் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும்போது வார்டன் துணையுடன் செல்ல வேண்டும். மாறாக தனியே ஆண்கள் செல்லக்கூடாது. இது பாதுகாப்பு குறைபாடுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அதனை சரிசெய்ய என்ஐடி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவிக்கு நடந்த கொடூரம்.. விடிய விடிய போராட்டம் நடத்திய மாணவர்கள்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.