ETV Bharat / state

தீபாவளி நேரத்தில் இதை மறந்துடாதீங்க.. திருச்சி போலீஸ் தீவிரம்! - DIWALI THIEVES IN TRICHY

தீபாவளியை ஒட்டிய நாட்களில் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க திருச்சி மாநகரத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 185க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருச்சி காவல் ஆணையர் காமினி
திருச்சி காவல் ஆணையர் காமினி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 9:50 AM IST

திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரில் மக்கள் அதிக அளவில் கூடும் கடை வீதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில், தீபாவளி திருடர்களைப் பிடிக்க மாநகர போலீசார் வழக்கம்போல சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

அதன்படி, திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட்டுகள் மற்றும் என்எஸ்பி ரோடு, பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 185க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்தி கோவில் தெரு உள்ளிட்ட ஆறு இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருச்சி காவல் ஆணையர் காமினி பேட்டி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், அனைத்து கண்காணிப்புக் கேமராக்களை கண்காணிக்கும் வகையில், தெப்பக்குளம் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணிக்க முடியும். இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மாநகர காவல் ஆணையர் காமினி பேசியதாவது, “திருச்சி தெப்பக்குளம், என்எஸ்பி ரோடு மற்றும் மலைக்கோட்டை பகுதிகளில் 185 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் பணி புரியும் பெண்கள் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்கருதி முதன் முறையாக பெண் காவலர்கள் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அது மட்டுமின்றி நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க உள்ளது.

இதையும் படிங்க: போதை சாக்லெட் விற்ற வேலையில்லா பொறியியல் பட்டதாரி கைது!

தரைக் கடைகளை மாற்று இடங்களில் அமைத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் போக்குவரத்து கழகத்தின் உதவியுடன் மன்னார்புரத்தில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி தமிழ்நாடு சிறப்புகாவல்படையை சேர்ந்த 35 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நாட்களில், கூடுதல் நேரம் கடையை திறக்க அரசு விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் கடைகளுக்கு முழு ஒத்துழைப்பு காவல்துறை தரப்பில் அளிக்கப்படும்.

செல்போன் பறிப்பில் இளம்சிறார்கள் பெருமளவு ஈடுபட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. திருச்சி மாநகரில் அரசு நிதியுடனும் பொதுமக்கள் பங்களிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செயல்படாத கேமராக்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பொருத்தும் பணியும், கூடுதல் கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

தனியார் பார்க்கிங் மற்றும் கட்டண பார்க்கிங் தற்போது தீபாவளிக்காக செயல்ப்பட்டுள்ளது. அதில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும். சாலைகளில் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும். திருச்சி மாநகரில் 1145 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. அதில் 850 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது. இதனை வாரத்தில் ஒருமுறை கணக்கிட்டு வருகிறோம். ஆபரேஷன் அகழி திட்டத்தில் எங்களது பணியை செய்து வருகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.