ETV Bharat / state

தஞ்சாவூரில் விவசாயிக்கு ஆதரவாக மலைவாழ் பெண் விவசாயிகள் தேர்தல் பிரச்சாரம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

thanjavur candidate senthilkumar: பிரதமர் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு கேட்பது வெட்கக்கேடானது எனவும், இந்திய விவசாயிகள் மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என தஞ்சை சுயேச்சை வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி. ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

thanjavur candidate senthilkumar
thanjavur candidate senthilkumar
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 5:05 PM IST

தஞ்சாவூரில் விவசாயிக்கு ஆதரவாக மலைவாழ் பெண் விவசாயிகள் தேர்தல் பிரச்சாரம்!

தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தஞ்சை தொகுதி சுயேச்சை வேட்பாளராகத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவருக்கு ஆதரவாக ஏற்காட்டைச் சேர்ந்த மலைவாழ் பெண் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பச்சை கலரில் புடவை அணிந்து கப்பல் சின்ன பதாகைகளை ஏந்தி இன்று (ஏப்.11) பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்தல் பிரகடனத்தினை பி. ஆர். பாண்டியன் வெளியிட்டார். அதில் தேங்காய், எள், நிலக் கடலை எண்ணெய் விற்பனையை வலியுறுத்தியும், முல்லைப் பெரியாறு அணை நீர் கொள்ளளவை 152 அடியாக உயர்த்தவும், மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுத்த நிறுத்த வலியுறுத்தியும் தேர்தல் பிரகடனம் வெளியிடப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலியாக இருந்து காப்பீட்டுத் திட்டத்தை, விவசாயிகளுக்குப் பெற முடியாத நிலையை உருவாக்கி விட்டது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமான கொள்கைகளைக் கையாண்டு கொண்டு, கொள்கை முடிவு எடுத்து தமிழ்நாட்டு மக்களை அழிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு செயல்படுகிறது.

இதனால், பிரதமர் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு கேட்பது வெட்கக்கேடானது, அவர் தமிழ்நாட்டிற்கு வருவது தமிழ்நாடு விவசாயிகள் ஏற்கவில்லை, இந்திய விவசாயிகள் மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறார்கள், விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் களம் இறங்கி இருக்கிறோம். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுமான பணி சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு மூன்றாயிரத்து 500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும். நீர் நிலைகளைத் தூர்வார வேண்டும், விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டைப் போல் காமராஜர் நினைவிடத்தை வைத்துள்ளனர் - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.