ETV Bharat / state

வாகன ஓட்டுநர் பழகுவதற்கான உரிமம் இ-சேவை மையங்களில் இனி விண்ணப்பிக்கலாம்… எப்படி? - LLR License at e Service Centers

LLR license applied in E-seva centres: இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இனி LLR லைசென்ஸ் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 10:29 PM IST

சென்னை: தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையச் சேவை மையங்களையும் பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை உள்ளது.

இதில், தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும்இ இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. இந்த சேவைகளைப் பெறுவதற்குப் பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை இருந்து வருகிறது.

இனி LLR லைசென்ஸ் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
இனி LLR லைசென்ஸ் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவிதப் புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையைக் கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.

இந்த வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்குப் பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60-ஐ செலுத்த வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட LLRஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 6 வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.