ETV Bharat / state

தொடர் விடுமுறையால் உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி! - NILGIRI

தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி நீலகிரியில் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் டால்பினோஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உதகையில் போக்குவரத்து நெரிசல்
உதகையில் போக்குவரத்து நெரிசல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 4:41 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சீசன் களை கட்டிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தற்போது தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், பைன் பாரஸ்ட் மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, அவலாஞ்சி போன்ற பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

மேலும் குன்னூர் டால்பின் நோஸ், லேம் ஸ்ராக் ஆகிய இடங்களில் இயற்கை காட்சியை ரசிக்கவும், மிதந்து வரும் மேக கூட்டங்களும் இதமான கால நிலையை அனுபவிக்கச் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள தேயிலை தோட்டங்கள் நடுவே நின்று புகைப்படம் எடுத்தும் அரிய வகை வனவிலங்குகள் ஆதிவாசிகள் குடியிருப்பு கேத்தரின் நீர்வீழ்ச்சி போன்றவற்றை கண்டு மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க: தொடர் மழையால் தேனியில் 100 ஏக்கர் நெற்பயிர் சேதம்..விவசாயிகள் வேதனை!

கடும் போக்குவரத்து நெரிசல்: குன்னூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டால்பினோஸ் செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் பல மணி நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் கமர்சியல் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.