ETV Bharat / state

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதலிடம்! தலைநகருக்கு 30வது இடம்! - 10th Exam Results Highlights - 10TH EXAM RESULTS HIGHLIGHTS

10th Exam Results: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 97.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், 97.02 சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் மாநிலத்தில் 30வது இடத்தை பிடித்துள்ளது.

மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்ப்பது போன்ற கோப்பு படம்
மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்ப்பது போன்ற கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 12:56 PM IST

அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேது ராம வர்மா அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26 முதல் ஏப் 8ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேது ராம வர்மா வெளியிட்டார்.

4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், 94.53 சதவீத மாணவிகள், 88.58 சதவீத மாணவர்கள் என மொத்தம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்களில், 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்று, அதன் தேர்ச்சி சதவீதம் 91.39 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

4 ஆயிரத்து 105 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஆயிரத்து 364 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 87.90 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதமும், இருபாலர் பள்ளியில் 91.93 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலம் பாடத்தில் 415 மாணவர்களும், கணக்கு பாடத்தில் 20 ஆயிரத்து 691 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 5 ஆயிரத்து 104 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 4 ஆயிரத்து 428 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 12 ஆயிரத்து 491 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.02 சதவீதம் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்தையும், 96.24 சதவீதம் பெற்று கன்னியாகுமரி மாவட்டம் நான்காவது இடத்தையும், 95.23 சதவீதம் பெற்று, திருச்சி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. 82.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் மாநிலத்தில் 30வது இடத்தையும் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், தேர்விற்கு வருகை தராதவர்கள் ஜூலை 2 முதல் மறுதேர்வு நடக்க உள்ளது. அதற்கான கால அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ஆம் அன்று பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், விடைதாள்களை மறு ஆய்வு செய்ய வரும் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேது ராம வர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது? விடைத்தாள் நகல் பெறுவது எப்படி? - 10th Supplementary Exam Date

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.