ETV Bharat / state

அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு! - Toll gate price increase - TOLL GATE PRICE INCREASE

Toll gate price increase: நாடு முழுவதும் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி புகைப்படம்
சுங்கச்சாவடி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 12:38 PM IST

திருப்பத்தூர்/கோயம்புத்தூர்: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதல் புதிய சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

எவ்வளவு அதிகரிப்பு? அதன்படி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 64 சுங்கச்சாவடிகளில் 36 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக அரியலூர் மணகெதி, திருச்சி கல்லக்குடி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

வாகனங்கள் ஒரு முறை கடந்து செல்ல கட்டணம்:

வாகனம்பழைய கட்டணம்புதிய கட்டணம்24 மணி நேரத்தில் அதே வழியில் திரும்பச் செல்வதற்கான கட்டணம்
கார், ஜீப், வேன்ரூ.115 ரூ.120ரூ.180
இலகு ரக வாகனங்கள்ரூ.180ரூ.185 ரூ.275
பேருந்து, டிரக்ரூ.365ரூ.375 ரூ.565
கனரக வாகங்கள்ரூ.555ரூ.570ரூ.855
ஏழு ஆக்சில் மற்றும் மேற்பட்ட ஆக்சிடர்கள் கொண்ட வாகனம்ரூ.720 ரூ.740ரூ.1,110

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் சராசரியாக ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கட்டண உயர்விற்கான புதிய அறிவிப்பு பலகையை சுங்கச்சாவடியில், சுங்கச்சாவடி ஊழியர்கள் வைத்துள்ளனர்.

லாரி உரிமையாளர்கள் கண்டனம்: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் வாகன ஓட்டிகள், புதிதாக அமையும் மத்திய அமைச்சரவை இந்த சுங்க கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கோவையில் இருந்து சென்னை செல்லும் பொழுது வழக்கமாக ஏற்படும் சுங்க கட்டண செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் எனவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். பாஸ்ட் டேக் மூலம் கட்டணம் வரவு வைக்கப்படுவதன் காரணமாக, கட்டண உயர்வு குறித்து பெரிய அளவில் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

அதே வேளையில் சிறிய உயர்வாக இருந்தாலும் தொலை தூர பயணங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு என கணக்கிடும் போது சுங்க கட்டண உயர்வு மக்களுக்கு சுமையை அதிகரிக்கும். அதே சமயம், சரக்கு வாகனங்களும் கட்டண உயர்வை பயன்படுத்தி வாடகையை உயர்த்தப்படுவதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்டிபிகேட் வாங்க வந்த மாணவரை வேலை வாங்கியதாக பெற்றோர் புகார்.. வைரலாகும் ஆசிரியரின் வீடியோ! - HEADMASTER VIRAl VIDEO

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.