சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் எனவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் மழை: தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 19, 2024
அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மழையைப் பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு, விடுமுறை அறிவிக்கப்படாத காரணத்தால், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
- கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு
- மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- இன்று மிதமான மழை முதல் கனமழை வரை கணிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு
- தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில் பள்ளியின் விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியரே முடிவு எடுக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 9 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு.. பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு உத்தரவு..!