ETV Bharat / state

தாய்ப்பால் குடித்த சிசு மரணம் முதல் பெண் காவல் அதிகாரியை தாக்கிய பாஜகவினர் வரை.. சென்னை குற்றச் செய்திகள்! - Chennai Crime News

Chennai Crime News: சென்னையில், தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்த பெண் குழந்தை உயிரிழப்பு; பிரச்சனையை தடுக்க வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த செய்தியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 1:18 PM IST

Crime news Related Image
Crime news Related Image (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத் குமார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யா என்பவருடன் திருமணமாகியுள்ள நிலையில், கடந்த மாதம் 21ஆம் தேதி புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆவதால், திவ்யா அவரது தாய் வீடான புளியந்தோப்பு கேஎம் கார்டன் முதல் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஜூன் 25ஆம் தேதி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துத் தூங்க வைத்துள்ளார். அதன் பிறகு குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டதால், உடனடியாக சிகிச்சைக்காக குழந்தையை புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது என்று கூறியதால் திவ்யா குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலையும் அதேபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துத் தூங்க வைத்துள்ளார். அப்போது குழந்தை மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால், பயந்து போன திவ்யா உடனே எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியில் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக பிரமுகர்கள்: சென்னை தேனாம்பேட்டை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் தணிகை அரசு என்பவர் வேனில் மாத கட்டணத்தில் சவாரி ஏற்றுவதற்கு மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வந்துள்ளார். அப்போது, அதே கல்லூரியில் சவாரி ஏற்றும் வேன் உரிமையாளரான பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 6 ஓட்டுநர்கள் எதற்காக அத்துமீறி கல்லூரியில் நுழைந்து குறைந்த விலையில் சவாரி ஏற்றுவதாக துண்டு பிரசுரங்கள் தருகிறாய் எனக் கேட்டு தணிகை அரசை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அங்கு முதலமைச்சர் கான்வாய் பணிக்காக தி.நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலட்சுமி இந்த பிரச்சனையைத் தடுக்க வந்ததுள்ளார். அந்த தகராறில் அவர்கள் உதவி ஆய்வாளரைத் தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அடிப்படையில், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், விஜய் ஆனந்த், கோபி நாதன், ராஜேஷ்குமார், கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: சென்னை கே.கே,நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் அதே பகுதியில் உள்ள ஏபி பேட்ரே சாலை பாலசுப்ரமணியம் சாலை சந்திப்பில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் விற்பனை செய்தது அசோக் நகர் 80-வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், இவர் மீது ஏற்கனவே லாட்டரி விற்பனை வழக்கு உள்ளதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த நோட்டு மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியில் ஆன்லைன் மூலமாக ஒரு நபர் தெரிந்த நபர்களுக்கு மட்டும் லாட்டரி விற்பனை செய்து வருவதாகத் தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து இருந்த செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளிப் புத்தகத்தில் தமன்னா குறித்த பாடம்.. கொந்தளித்த பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.