சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் இணைப் பதிவாளர், ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக்கழக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து இன்று இணைப்பதிவாளரிடம் விசாரணை நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவிகளும் இணைப் பதிவாளரை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும், அவர் அழைக்கும் போதெல்லாம் அவரது அறைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.
இதற்கு உயர்கல்வித்துறை உரிய கவனம் செலுத்தி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவி தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "பாதுகாப்பு குறைபாடு உறுதி" - திருச்சி என்ஐடி விவகாரத்தில் பகீர் கிளப்பிய கலெக்டர்! - Trichy NIT Student Harassment Issue