ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்கள் திருத்தம்; விரைவில் வருகிறது புதிய நடைமுறை! - TNPSC

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

விடைத்தாள் திருத்தம் செய்வதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி துவங்கி உள்ளது என்றும், கம்ப்யூட்டர் முறையில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, திருத்தம் செய்யும் பணியை மேற்கொள்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி கோப்புப்படம்
டிஎன்பிஎஸ்சி கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதன்மை தேர்வுகளில் இனி பாட வாரியாக தேர்வர்களின் விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட உள்ளது. வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதல் கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப் 2 முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் இந்த நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகள் முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில், முதல்நிலைத் தேர்வுகள் விடைகளை தேர்ந்தெடுத்து, விடை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை பொருத்தவரை தேர்வர்கள் பாட வாரியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

எனவே, முதன்மைத் தேர்வு விடைத்தாள்கள் 60 முதல் 70 பக்கங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை திருத்துகின்ற போது விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற நபர்கள் பல்வேறு குளறுபடிகளை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியிள் காலதாமதம் ஏற்படுவதால், இதனால் தேர்வு முடிவுகளை அறிவிக்கப்பட்ட தேதிகளில் வெளியிட முடிவதில்லை. இனி இதனை தவிர்க்கும் பொருட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், ஏற்கனவே விடைத்தாள்கள் ஸ்கேன் செய்வது போன்று ஸ்கேன் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து புதிய முறையில் தேர்வர்களின் விடைத்தாளில் பாடவாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்களை தனியே தனியே பிரித்து எடுக்கப்படும்.

இதையும் படிங்க : TNPSC Group 2 Answer Key எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்! - TNPSC Group 2 Answer Key

இதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் மூலமாக பிரத்யேகமாக உருவாக்கப்படும் மென்பொருள் உதவி மூலம் விடைத்தாள் திருத்தம் பேராசியர்களுக்கு விடைத்தாள்கள் பகிரப்படும். இதனைத் தொடர்ந்து அவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து விடைத்தாள்களை படித்து பார்த்து அதற்குரிய மதிப்பெண்களை மட்டும் வழங்குவார். இந்த புதிய முறையில் இனி ஆட்களை கொண்டு விடைத்தாள்கள் திருத்தப்படமாட்டாது. இதனால் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய அம்சமாக விடையை படித்து மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்த குறைந்தபட்ச நேரம் முடிவடைவதற்கு முன்னர் அவர் அடுத்த விடைக்கு செல்ல இயலாது. இதனை தொடர்ந்து வழங்கப்பட்ட மதிப்பெண்களை கூட்டி அவை பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தும் GIS எனப்படும் புவி தகவல் அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

இறுதியாக பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்கான மென்பாெருள் வடிவமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை மேற்காெண்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.