ETV Bharat / state

தீபாவளி; ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் - KILAMBAKKAM SPECIAL BUSES

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர்
அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 1:10 PM IST

Updated : Oct 27, 2024, 3:42 PM IST

கிளாம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்ளிடம் பேசியதாவது; இந்த தீபாவளிக்கு 5 லட்சம் மக்கள் தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்ல வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடாக 4 ஆயிரத்து 210 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. பயணிகள் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா உயிரியல் பூங்கா, கரசங்கால் மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு போதுமான அத்தியாவசிய தேவைகளான குடிநீர் கழிப்பிடம் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தவெக தொண்டர்கள் இருவர் பலி..! சென்னையில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்..!

அதபோல கிளாம்பாக்கத்தில் 8 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறைமலைநகர், கரசங்கால், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் பயணிகள் செல்லக்கூடிய ஊர்களுக்கான பேருந்து விவரம் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளும் அரசு கட்டுப்பாட்டில் தான் இயங்கும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, தாம்பரம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து 10 நிமிடத்திற்கு ஒரு மாநகர பேருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யும் பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ வசதிகள் ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவவைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பேருந்து முன்பதிவு மையங்களில் 5 கவுண்டர்கள் செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அங்குள்ள கடைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் நிறை குறைகளை கேட்டறிந்தனர். பிறகு டிக்கெட் கவுண்டரிலும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 27, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.