ETV Bharat / state

ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது? - Teachers Job Transfer Application - TEACHERS JOB TRANSFER APPLICATION

School Teachers Transfer Counseling Application open: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு மே 13 முதல் 17ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், அப்படி விண்ணப்பிக்கும் பொழுது அனைத்து தகவல்களையும் சரியாக தர வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்ககம் வளாகம் புகைப்படம்
பள்ளிக் கல்வி இயக்ககம் வளாகம் புகைப்படம் (Photo Credits to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:57 AM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2024 - 2025ஆம் கல்லி ஆண்டில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பங்களைக் கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை 13.5.2024 முதல் 17.5.2024 அன்று மாலை 6 மணி வரை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.
  • ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது, கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் தங்களுக்கான Individual Login ID-ஐ பயன்படுத்தி மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது ஏதேனும் தங்கள் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (Example: பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கான Login ID-ல் Teacher Profile-க்குச் சென்று தவறாக உள்ள விவரங்களைச் சரிசெய்து பின்னர் மீளவும், தங்களுடைய Individual Login ID-க்குச் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.
  • மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும் போது, அதற்கென உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்)
  1. விருப்ப மாறுதல்
  2. மனமொத்த மாறுதல்
  3. நேரடி நியமனம்
  4. பதவி உயர்வு
  5. நிருவாக மாறுதல்
  6. அலகு விட்டு அலகு மாறுதல்
  7. பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கணவன் - மனைவி (Spouse priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் பணிபுரியும் அலுவலகம், பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். கணவன் - மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிலோமீட்டருக்கு மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.