ETV Bharat / state

தேவஸ்தான அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு வாக்குவாதம்: திருப்பதியில் நடந்தது என்ன? - anivara asthanam tirupati - ANIVARA ASTHANAM TIRUPATI

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான அதிகாரிகளுடன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் அமைச்சர் சேகர் பாபு
திருப்பதியில் அமைச்சர் சேகர் பாபு (Image Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 7:35 PM IST

Updated : Jul 16, 2024, 8:00 PM IST

ஹைதராபாத்: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு - செலவு கணக்குகளை ஏழுமலையான் சாமியிடம் சமர்ப்பிக்கும் பாரம்பரிய வைபவம் ஆனி மாத கடைசி நாளில் நடைபெறுவது வழக்கம். 'ஆனி வார ஆஸ்தானம்' எனப்படும் இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அளிப்பது வழக்கம். இந்த நிகழ்வுக்காக என்றே, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்கு மங்கலப் பொருட்கள் பிரத்யேகமாக எடுத்து செல்லப்படும் நடைமுறையும் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஆனி வார ஆஸ்தானம், திருமமலை திருப்பதியில் இன்று நடைபெற்றது. இந்த வைபத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பத்து பேரும் மகா துவாரம் எனப்படும் ராஜகோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படியே அவர்கள் அனைவரும் கோயிலுக்குள் சென்றனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த அறநிலையத் துறை இணை ஆணையர் மாரியப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்றார். அப்போது அவரை தேவஸ்தான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பத்து பேருக்கான தான் வைபவத்தில் பங்கேற்க அனுமதி எனக் கூறி. அவரை அதிகாரிகள் கோயில் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தினர். இதனை கண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர் பாபு, இணை ஆணையரையும் கோயிலுக்குள் அனுமதிக்குமாறு தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி சீட்டு (பாஸ்) இருப்பதால் அவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுடன் அமைச்சர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை அனுமதிக்காமல் தான் கோயிலுக்கு உள்ளே செல்லமாட்டேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து தேவஸ்தான நிர்வாகம், இணை ஆணையர் மாரியப்பனையும் கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். அமைச்சர் சேகர் பாபு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பதி கோயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு! - யூனிட்டுக்கு எவ்வளவு அதிகம் தெரியுமா?

Last Updated : Jul 16, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.