ETV Bharat / state

பால்வளத்துறையில் இவ்வளவு அறிவுப்புகளா? 18 புதிய அறிவிப்புகள் இதோ! - Tamil Nadu assembly session 2024

Tamil Nadu assembly session: சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவதாத்தின் போது, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ் (Credits - MINISTER MANO THAGARAJ X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 10:55 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிலையில் அதில் மானிய கோரிக்கை விவதாம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அப்போது, அமைச்சர் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர் சார்பில் புதிய 18 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார். பால்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்...

  1. 2024-25ம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு SS பால்கேன்கள், பால் அளவை உபகரணங்கள், பதிவேடுகள் மற்றும் பால் பரிசோதனை கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.
  2. பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 லட்சம் செலவில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும்.
  3. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.
  4. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து டானிக் (Nutraceuticals) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும்.
  5. களப் பணியாளர்களான கால்நடை மருத்துவர்கள், விரிவாக்க அலுவலர்கள், கிராம நல ஊழியர்கள் போன்ற 3000 பணியாளர்களுக்கு பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படும்.
  6. தரமான பால் கொள்முதல் மற்றும் பால் உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கரூர் ஒன்றியங்களில் ரூ.234 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வுக்கூடங்கள் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் [N P D D]மூலம் நிறுவப்படும்.
  7. 23 ஒன்றிய மற்றும் அனைத்து இணைய பால்பண்ணைகளின் ஆய்வுக்கூடங்கள் ரூ.931.50 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் மேம்படுத்தப்படும்.
  8. கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஒன்றிய மற்றும் இணைய ஊழியர்களுக்கு ரூ.95 இலட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் வழங்கப்படும்.
  9. முதற்கட்டமாக புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் (ERP & AMCS) பணிகள் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் செயல்படுத்தப்படும்.
  10. 150 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் முதற்கட்டமாக ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் பால் பகுப்பாய்வு (கலப்படம்) கருவிகள் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NPDD) நிறுவப்படும்.
  11. பால் கொள்முதல், பாலின் தரம் மற்றும் பால் விநியோகம் ஆகியவற்றிற்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்கு ஏதுவாக 500 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் மென்பொருள் நிறுவப்பட்டு பால் கொள்முதல் செயல்பாடுகள் Cloud Based Connectivity மூலம் கண்காணிக்கப்படும்.
  12. பால் உற்பத்தியாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் கறவை மாடுகள் குறித்த விபரங்கள், பால் உற்பத்தி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பயிரிடும் பசுந்தீவனத்தின் அளவு ஆகிய தரவுகள் ஆன்ட்ராய்டு செயலி மூலம் சேகரிக்கப்படும்.
  13. சிவகங்கை ஒன்றியத்தின் தற்போதுள்ள பால்பாக்கெட் குளிர்பதன அறையின் கையாளும் திறன் 20,000 லிட்டரிலிருந்து 1,00,000 லிட்டராக ஒன்றியத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி உயர்த்தப்படும்.
  14. சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க சிறப்பு கால்நடை பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  15. நாமக்கல் ஒன்றியத்தில் பால் கொள்முதல், பால் பதப்படுத்துதல் மற்றும் பால் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகள் தேசிய பால்வள வாரியத்தின் (NDDB) "ஒன்றிய புத்தாக்க திட்டத்தின்" கீழ் மேம்படுத்தப்படும்.
  16. மாவட்ட ஒன்றிய மற்றும் சென்னை மாநகர பால்பண்ணைகளுக்கு ISO 22000 சான்றிதழ் பெறப்படும்.
  17. மாவட்ட ஒன்றியங்களுக்கு சொந்தமான காலி நிலத்தில் இயந்திரமயமாக்கபட்ட நவீன விவசாய முறைகளை பயன்படுத்தி மாதிரி கால்நடை பண்ணை நிறுவுதல்.
  18. புதிதாக பால் பண்ணை தொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோருக்காக இரண்டு பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையம் அமைத்தல்.

இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்ததற்கு பக்தர்கள் காரணமா? - அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன? - Nellaiappar chariot festival issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.