ETV Bharat / state

இர்பான் குழந்தை தொப்புள் கொடி விவகாரம்: தனியார் மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை

யூடியூபர் இர்பான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை அறுவைச் சிகிச்சை அரங்கில் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தமிழ்நாடு மருத்துவத்துறை தடை விதித்துள்ளது.

அறுவைச் சிகிச்சை அரங்கில் இர்பான்(கோப்புப் படம்)
அறுவைச் சிகிச்சை அரங்கில் இர்பான்(கோப்புப் படம்) (Credit - irfansview Instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 7:17 PM IST

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கில் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ தனியார் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 நாட்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை தடை விதித்துள்ளது.

யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் துபாய் சென்றபோது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவமனையில் சோதித்து, அதனையும் யூடியூபில் வீடியோவாக வெளியிட்டார். இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத் துறை கைவிட்டது. இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்து, குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தியிடம் கேட்டப்போது, "குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை யூடியூபில் இர்பான் வெளியிட்டு இருக்கும் நிலையில், இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும், அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை துண்டிக்க செய்யவும் பணியில் இருந்த மருத்துவர்கள் எப்படி அனுமதித்தனர் என அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், "ரெயின்போ மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம், மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சையில் உள்ளவர்களை தவிர புதியதாக அவசர சிகிச்சை உட்பட பிற சிகிச்சைகளை 10 நாட்களுக்கு தடை, ஏற்கனவே பதிவு செய்துள்ள கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.