ETV Bharat / state

14 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..சேலம் மாநகராட்சி புதிய ஆணையாளர் யார் தெரியுமா? - tn govt transfer from IAS officers

TN Govt Transfer From IAS Officers : தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம், சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங்
தலைமைச் செயலகம், சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 9:50 PM IST

சென்னை: தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.சேக் அப்துல் ரஹ்மான் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராகவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டிஆர்ஓ துர்கா மூர்த்தி வணிகவரித் துறை நிர்வாகப்பிரிவு இணை ஆணையராகவும், பெரம்பலூர் ஆட்சியர் கே.கற்பகம் நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் கவிதா ராமு அருங்காட்சியகங்கள் இயக்குனராகவும், பவர்ஃபின் மேலாண் இயக்குனர் ஆர்.அம்பலவாணன் தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிதித்துறை இணை செயலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி கருவூல கணக்குத்துறை ஆணையராகவும், திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், பொதுத்துறை மரபுப்பிரிவு இணை செயலர் எஸ்.அனு கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் சேலம் மாநகராட்சி ஆணையராகவும், மாநில விருந்தினர் மாளிகை வரவேற்பு அதிகாரி எஸ்.கந்தசாமி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் ஆர்.சதீஷ் ஈரோடு கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைத்தறித் துறை ஆணையர் கே.விவேகானந்தன் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மேலாண் இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த ஹனிஸ் சாப்ரா திருப்பூர் பகுதி மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனராகவும், பொதுத்துறை கூடுதல் செயலர் ஏ.சிவஞானம் சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குனராக இருந்த எஸ்.அமிர்தஜோதி தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு இதுதான் காரணமா? - சந்தேகம் கிளப்பும் பிஎஸ்பி புதிய மாநிலத் தலைவர்! - TN BSP new leader

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.