ETV Bharat / state

தரைப்பாலங்கள் முதல் நகரும் படிக்கட்டு வரை.. ரூ.1,000 கோடியில் புதிய அறிவிப்புகள்.. முழு விவரம் இதோ! - TN ASSEMBLY Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN Assembly Meeting 2024: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, 13க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகளை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

அமைச்சர் எ.வ.வேலு புகைப்படம்
அமைச்சர் எ.வ.வேலு புகைப்படம் (Credits - e.v.velu X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 6:20 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது புதிய அறிவிப்புகளை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

நெடுஞ்சாலை துறை புதிய அறிவிப்புகள்:

  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சாலைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் இரண்டாம் கட்டமாக ரூ.1,055 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைக்கப்படும்.
  • நெடுஞ்சாலைத்துறையில் பாலங்களை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை கண்டறிந்து பழுதுகள் ஏற்பட்டிருப்பின் அதனை உடனுக்குடன் சீரமைக்க, நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை கொண்ட பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு உருவாக்கப்படும்.
  • முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 200 கிலோமீட்டர் நீளச்சாலைகளை நான்கு வழித்தடமாகவும், 550 கி.மீ நீளச்சாலைகளை இருவழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
  • அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் 50 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சாலை பாதுகாப்பை மேம்படுத்த சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களுக்கு புறவழிச்சாலையும், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்புச் சாலையும்
    ரூ. 321 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • தேவையான நில எடுப்பு பணிகள் ரூ.159 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • மயிலாடுதுறை, கடலூர், சிட்டம்பட்டி, தென்காசி பகுதிகளில் சாலைகளை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
  • சென்னை பெருநகர மாநகரப் பகுதியில் பேருந்து நிறுத்தம், நடை மேம்பாலம், உயர்மட்ட சாலை, மேம்பாலம் போன்ற பணிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் நகரிலும் மற்றும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகிலும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ.28 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
  • தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கப்படும்.
  • நெடுஞ்சாலைத் துறையில் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலைப்பகுதிகளில்
    நிலச்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்க ரூ.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 600 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.680 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க: 18 மாதங்களில் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு! - TAMIL NADU ASSEMBLY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.