ETV Bharat / state

PMAY திட்ட முறைகேடு; கிருஷ்ணகிரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு தகவல்! - Krishnagiri PMAY Cheating

PMAY Scam in Krishnagiri: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

PMAY and Madras High Court
PMAY and Madras High Court (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 7:34 PM IST

சென்னை: பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி, 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு? - 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.