ETV Bharat / state

அரசு கலைக் கல்லூரியில் விண்னபிக்க மே 24 வரை அவகாசம் நீட்டிப்பு! - Govt College Application extended

Govt College Application extended: மாணவ,மாணவிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 24ஆம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான கோப்பு புகைப்படம்
மாணவர் சேர்க்கை தொடர்பான கோப்பு புகைப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 9:22 PM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6ந் தேதி முதல் 20 ந் தேதி வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஏற்கனவே அறிவித்தபடி இன்றுடன் (திங்கள்கிழமை) மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெற இருந்தது. இந்த நிலையில் மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று வரும் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்களுக்காக சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்தாண்டை போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தப்பின்னர் ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 27 ந் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

தர வரிசையின் அடிப்படையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 28ந் தேதி முதல் 30 ந் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ந் தேதி முதல் 15 ந் தேதி வரையிலும், 2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 ந் தேதி முதல் 29 ந் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ந் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருவதால், இந்த ஆண்டு சேர்க்கை எண்ணிக்கை 20 சதவீதம் வரை உயர்த்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒன்றரை கோடி கொள்ளை என நாடகம்.. கோவையில் சிக்கிய பாஜக பிரமுகர்.. காவல்துறை அளித்த பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.