ETV Bharat / state

ஶ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்; தரிசனத்திற்கு வந்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கட்சியினர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 4:39 PM IST

Updated : Feb 2, 2024, 10:40 PM IST

RN Ravi in Thanjavur: திருபுவனம் அருள்மிகு சமேத ஶ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் தருமபுரம் ஆதீனம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சைவ ஆதீனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Thirupuvanam Sarapeswarar Temple Kumbabesheikam
ஶ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா

தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் சிறப்பு ஸ்தலமான திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத ஶ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமானதாகவும், 3ஆம் குலோத்துங்கச் சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும். இந்தக் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் சிறந்து விளங்கி வருகிறது. இக்கோயில் சச்சிதானந்த விமானம் உள்பட 4 பெரிய கோபுரங்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் இக்கோயிலின் திருப்பணி செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்காக கடந்த 29ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து, தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், 51 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில், 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன், ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசகப் பதிகங்களுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.2) கோயிலின் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள் மூலவ விமானங்கள் மகா கும்பாபிஷேக பெருவிழாவையொட்டி, பிரமாண்ட யாகசாலை மண்டபத்தில் 8ஆம் கால யாக பூஜையில் மகா பூர்ணாஹூதி செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள், நாதஸ்வரம் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் தருமபுரம் ஆதீனம் மற்றும் 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், மகா கும்பாபிஷேகத்தின் பெருவிழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகப் பெருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதி கேசவலு, பேரூராட்சித் தலைவர் அமுதவள்ளி கோவிந்தன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி மீனா தலைமையில், 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெண்மணி போராட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அதனை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும், தியாகத்தை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

இதனையடுத்து, கும்பகோணம் புறவழிச்சாலை செட்டிமண்டபம் பகுதியில் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், கருப்புக் கொடி மற்றும் கட்சிக் கொடியுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் சிறிது நேரத்திற்கு திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில், கும்பகோணம் கிழக்கு ஆய்வாளர் அழகேசன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து குண்டு கட்டாக கைது செய்து அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் அணைக்கரை சென்று, அங்கிருந்து ஆடுதுறை வழியாக திருபுவனம் கோயிலைச் சென்றடைந்தார்.

இதையும் படிங்க: சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் 'NIA' அதிகாரிகள் சோதனை!

Last Updated : Feb 2, 2024, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.