ETV Bharat / state

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்! - Rahul Gandhi yatra

Tamil Nadu CM MK Stalin left to Mumbai: அகில இந்தியக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்
ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 4:01 PM IST

சென்னை: ராகுல் காந்தியின் 2 வது கட்ட நடைப்பயணமான ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( மார்.17) சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார்.

அகில இந்தியக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட யாத்திரையான “ஒற்றுமை நீதி யாத்திரை” கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்திலிருந்து தொடங்கிய இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்திரபிரதேசம் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று நிறைவு பெற உள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் இந்த யாத்திரையின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் இந்தியக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார்.

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மும்பை புறப்பட்டுச் சென்றனர். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "விழுப்புரத்தில் மீண்டும் நான்தான் போட்டியிடுகிறேன்" - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.