ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஆளுநரா, ஆரியநரா? என முதல்வர் காட்டம்.. தவறு செய்தது யார் என கருநாகராஜன் விளக்கம்! - MK STALIN CONDEMNS R N RAVI

சென்னையில் 'டிடி தமிழ்' சார்பில் நடைபெற்ற 'இந்தி மாதம்' கொண்டாட்ட நிறைவு விழா நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வார்த்தை விடுப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி (Credits - ETV Bharat tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 6:11 PM IST

சென்னை:டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை விடுப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரா?,ஆரியரா? என்று தமிழக ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " சென்னையில் ஆளுநர் இன்று பங்கேற்ற நிகழ்ச்சியில் 'திராவிடம்' என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

முதல்வர் ட்வீட்
முதல்வர் ட்வீட் (Credits - M K Stalin X Page)

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்." முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில், " சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

ஈபிஎஸ் கண்டனம்: இதனிடையே, தமிழ்நாட்டில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதற்கு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

எங்கெங்கு காணினும் இந்தியடா: இதுதொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "'எங்கெங்கு காணினும் சக்தியடா ” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தொட்டதெற்கெல்லாம் அவரை குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் “எங்கெங்கு காணினும் இந்தி”-யடா என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும் என்றும், அதில் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல." என்று எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை கண்டித்திருந்தார்.

தேசிய கீதத்தையும் இப்படி பாட முடியுமா?: இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டின் ஆளுநர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆளுநரை திருப்திப்படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அதைத் திருத்தி, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை வாசிக்காமல் விடுபட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய கீதத்திலும் 'திராவிட' என்ற வார்த்தை வருகிறதே? அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா?

தேசிய கீதம் நாட்டிற்கு பெருமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை என்பதை தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்." என்று தமது பதிவில் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் அரசியல் செய்கிறார்: இதனிடையே, ஆளுநர் நிகழ்ச்சி குறித்து எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு பேசிய பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், "ஆளுநர் குறித்து எதிர்கட்சிகள் பேசுவது திட்டமிட்ட அரசியல் பொய் பிரச்சாரம், அரசியலுக்காக இதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆளுநீர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியவர்கள் சரியான பயிற்சி இல்லாமல் பாடியதாக தெரிகிறது. முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள், பங்குபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுகிறவர்கள் ஒத்திகை எடுத்த பின் பாட வேண்டும். அப்படி பாடி பழக்கப்பட்டவர்களை பட வைக்க வேண்டும்.

இது எதார்த்தமாக நடைப்பெற்ற செயலாக இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது திட்டமிட்ட செயல் கிடையாது இதில் அரசியல் செய்வது தவறு. ஆளுநர் நடத்தும் விழா, ஆளுநர் மாளிகையில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது அங்கு எல்லாம் திராவிடத்தை விட்டு பாடவில்லையே.. திடீரென முதலமைச்சருக்கு ஏதோ மனசில் தோன்றியுள்ளது அரசியல் பண்ணுவதற்கு வேறு எதுவும் இல்லை என்பதால் இதை வைத்து அரசியல் செய்கிறார்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.