ETV Bharat / state

"ஆண்களுக்கு ஏன் பாலின சோதனை இல்லை" விளையாட்டு சர்ச்சைகளை சாடும் தடகள வீராங்கனை சாந்தி - Tamil Nadu Athlete Santhi - TAMIL NADU ATHLETE SANTHI

Tamil Nadu Athlete Santhi: பாலின சர்ச்சை தொடர்பான பரிசோதனை உலக அரங்கில் தவறுதலான எடுத்துக்காட்டு. பாலின சோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளை பெண்களுக்கு எதிரான தாக்குதலாகவே பார்க்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் எதிர்காலத்தில் நிறைய பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவது கேள்விக்குறியாகிவிடும் என்று தமிழக தடகள வீராங்கனை சாந்தி ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தடகள வீராங்கனை சாந்தி, வினேஷ் போகத், இமானே கெலிஃப்
தடகள வீராங்கனை சாந்தி, வினேஷ் போகத், இமானே கெலிஃப் (Credits - AP , IANS and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 7:21 PM IST

Updated : Aug 8, 2024, 7:53 PM IST

திருச்சி: அது 2006ம் ஆண்டு. ஆசியாவின் உச்சபட்ச விளையாட்டரங்கில் பாலின சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறி பதக்கம் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சாந்தி. 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றிருந்த நிலையில், நாடு திரும்பும் வரையிலும் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இன்று வினேஷ் போகத்திற்காக நாடே துயரத்தில் ஆழ்ந்திருப்பது போன்ற சம்பவம் 18 ஆண்டுகளுக்கு முன்பும் நிகழ்ந்திருந்தது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் முன்னதாகவே தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தது.

தமிழக தடகள வீராங்கனை சாந்தி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

முதலமைச்சராக இருந்த கருணாநிதியை சந்திப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் சாந்தி. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவலை முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவித்திருந்தனர் அதிகாரிகள். பதக்கம் இல்லாதவருக்கு பரிசுப்பணம் கொடுப்பதா? என்ற கேள்வி எழுந்த போது, ஓடியது அந்த கால்கள் தானே என கூறிய கருணாநிதி. சாந்தியை நேரில் அழைத்து பரிசு வழங்கினார்.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றின் அந்த சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் அரங்கேறியிருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அல்ஜீரியா நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை ஆதரித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், "தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கும். எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும் இப்போது இமானே கெலிஃப் ஆகிய உங்களுக்கும் அப்படிதான். உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது" என பதிவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி செளந்தரராஜனை தொடர்புகொண்ட ஈடிவி பாரத் ஊடகம் இதுகுறித்து பேட்டி கண்டது. அப்போது அவர், "2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வாங்கியுள்ளேன். அதுதான் என்னுடைய கடைசி போட்டி. பாலின சர்ச்சை தொடர்பான பரிசோதனை உலக அரங்கில் தவறுதலான எடுத்துக்காட்டு. பாலின சோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்யக் கூடாது. இந்த விஷயத்தை பெண்களுக்கு எதிரான தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.

இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் எதிர்காலத்தில் நிறைய பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவது கேள்விக்குறியாக இருக்கும். இதற்கு பின் பெண்கள் எப்படி பாதிப்பு அடைகிறார்கள் என்பதை யாரும் யோசிக்காமல் தொடர்ந்து பாலின சர்ச்சை தொடர்பான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், ஆண்களுக்கு இதுபோன்ற சோதனை நடத்துவதில்லை.

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களையும் சரிசமமாக நாம் பார்க்க வேண்டும். இதனை பொருட்படுத்தாமல் ஒருவர் மனது புண்படும்படி சோதனை என்ற பெயரால் அவரது வாழ்க்கையே வீணகிறது. அனைத்து அரசுகள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆண், பெண்ணை சரிசமமாக பார்க்க வேண்டும்.

உளவியல்ரீதியான பாதிப்பு: எனக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சனையிலிருந்து தற்போது வரையிலும் மீள முடியவில்லை. இதுபோன்ற பிரச்சனையிலிருந்து அவ்வளவு எளிதாக மீள முடியாது. இதன் பிறகு ஒருவரது வாழ்க்கை மிகபெரிய கேள்விக் குறியாகிவிடும், நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறிவிடும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாலின சோதனைக்கு பின் தமிழகம் வந்த எனக்கு அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி ரூ.15 லட்சம் பரிசு கொடுத்தார், வீடு கொடுத்து எனது வாழ்க்கையை காப்பாற்றினார். அப்போது தமிழக அரசு எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்ததுபோல் என்னைப்போல பாதிக்கப்படும் அனைத்து வீரர்களுக்கும் அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

டெஸ்டோஸ்டிரோன்: ஒருவர் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனின் அளவு ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக, பெண் விளையாட்டு வீரங்கணைகள் பயிற்சி எடுக்கும்போது இந்த ஹார்மோன் ஆண்களை விட அதிகமாக இருக்கும். அப்போது அந்த பெண்ணை நாம் ஆண் என குறிப்பிட முடியாது.

அதே நேரத்தில் விளையாட்டு பயிற்சி எடுக்கும் சில ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும் இதனால் அவர்களை பெண் என கூற முடியாது. டெஸ்டோஸ்டிரோன் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு விஷயம். இதை வைத்து கொண்டு பெண்களை தடை செய்வது தவறான முன் உதாரணமாகவும், தவறான செயலாகவும் இருந்து வருகிறது.

தூத்துக்குடி எம்பி கனிமொழி: தூத்துக்குடி எம்பி கனிமொழி, குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்க்கும், எனக்கும் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். இது மகிழ்ச்சியான விஷயம். இதுபோன்ற அரசியல் தலைவர்கள், உலக பிரபலங்கள் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு தர வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட வீரர்களின் நிலைமை வெளிஉலகிற்கு தெரிய வரும்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: உண்மையிலேயே இந்தியனாக எல்லோரும் வருத்தப்படக்கூடிய விஷயம். இந்திய நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பதக்கம் தவறிவிட்டது. இது மிகப் பெரிய இழப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்திகளை சொல்கிறார்கள் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை" என சாந்தி வருத்தத்தோடு தெரிவித்தார் .

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "இனி போராட சக்தியில்லை" - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்.. வெள்ளிப் பதக்கம் வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு!

Last Updated : Aug 8, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.