ETV Bharat / state

“சீட் ஷேர் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை”.. டி.கே.எஸ்.இளங்கோவன்! - DMK VCK ALLIANCE ISSUE - DMK VCK ALLIANCE ISSUE

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பொதுவெளியில் தான் பேசியுள்ளார் எனவும், எந்த முடிவும் திமுக தலைவர் தான் எடுப்பார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் மற்றும் டிகேஎஸ் இளங்கோவன்
திருமாவளவன் மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் (Credits - Thirumavalavan 'X' page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 4:19 PM IST

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், திமுகவின் பவள விழாவையொட்டி அண்ணா அறிவாலய கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள பவள விழா லட்சினையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பொதுவெளியில் தான் பேசியுள்ளார். திமுகவிடம் நேரடியாக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க : தமிழக அரசியல், முன்னேற்றத்தில் 75 ஆண்டு கால திமுகவின் பங்கு என்ன? - Significance in 75 Years of DMK

சீட் ஷேர் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த தேர்தலின் போது பேச வேண்டும் என கூறினார். கடந்த தேர்தல்களில் எந்தவித ஒப்பந்தமும் இது குறித்து போடவில்லை‌ என்று தெரிவித்தார். எந்த முடிவும் திமுக தலைவர் தான் எடுப்பார் எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.