ETV Bharat / state

முன்னாள் காதலனை காரில் கடத்த முயன்ற பெண்.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன? - Tiruvannamalai Ex boyfriend kidnap - TIRUVANNAMALAI EX BOYFRIEND KIDNAP

tiruvannamalai Ex boy friend kidnapped: செங்கம் அருகே முன்னாள் காதலனை சகோதரர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பெண் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலீசார் விசாரணை புகைப்படம்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலீசார் விசாரணை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 12:01 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த கோட்டங்கள் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஆனைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சத்தியா ஆகியோர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காதலித்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் காவல் நிலையத்தில் வைத்து பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேஷுக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது. இதனை அறிந்த சத்தியா தனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் நேற்று இரவு ராஜேஷை கடத்த முயன்றதாகவும், அப்போது, ராஜேஷ் கார் ஓட்டுநரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது காரில் இருந்தவர்கள் அவரை குத்தியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது ராஜேஷ் கூச்சலிடவே அந்த கும்பல் காரை வீட்டுவிட்டு தப்பிய நிலையில், ராஜேஷை மீட்ட பொதுமக்கள், ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர் வாங்கிய குளிர்பானத்தில் இறந்து கிடந்த பல்லி.. திருவண்ணாமலையில் மீண்டும் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.