அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாதம் உண்டியல் காணிக்கை ரூ.3.5 கோடி வசூல்! - Annamalaiyar temple Bill offering - ANNAMALAIYAR TEMPLE BILL OFFERING
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அதில் ரூ.3.05 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published : Sep 27, 2024, 4:43 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம்.
அதன்படி, புரட்டாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பீகாரில் 'ஜிதியா' பண்டிகை: நீராட சென்றபோது ஆற்றில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், கிரிவலப்பாதை மற்றும் அஷ்டலிங்க சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் பவுர்ணமி கிரிவலம் தற்காலிக உண்டியல்களிலும் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை எண்ணப்பட்டது.
அதில், ரூ. 3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 388 கிராம் தங்கம், 1.652 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் சுமார் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்